Home செய்திகள் கணவன்-மனைவி தகராறு… புரோக்கரை தாக்கிய தொழிலாளி… போலீசார் நடவடிக்கை…!!

கணவன்-மனைவி தகராறு… புரோக்கரை தாக்கிய தொழிலாளி… போலீசார் நடவடிக்கை…!!

by Revathy Anish
0 comment

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வடவாம்பழம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஜெகதீஸ்வரி கணவனை பிரிந்து தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று சக்திவேல் அரசமங்கலம் பகுதிக்கு சென்று இருந்தார்.

அப்போது சக்திவேலுக்கு பெண்பார்த்த திருமண புரோக்கர் பெருமாள் என்பவர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்து ஆத்திரமடைந்த சக்திவேல் நீ தானே எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாய் என்று கூறி பெருமாளை தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார். இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் அடிப்படையில் வளவனூர் போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.