மகள் இறப்பிற்கு நான் தான் காரணம்… மனமுடைந்த தாயின் விபரீத முடிவு… திருவொற்றியூர் அருகே சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளி இவருக்கு சுதா என்ற மனைவியும், ராகவி(17) என்ற மகளும் உள்ளனர். ராவை அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது பெற்றோர் ராகவியை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராகவி கடந்த 15 ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் என்னால் தான் எனது மகள் இறந்து விட்டால் என சுதா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. மேலும் நேற்று வீட்டில் தனியாக இருந்த சுதா மகள் இறந்த விரக்தியில் அவரும் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!