கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் “தீப்பெட்டி தர முடியாது”… பெண்ணை வெட்டிய நபர்… போலீசார் விசாரணை…!! Revathy Anish25 June 2024077 views கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் செல்வி என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செல்வன் என்பவர் அவரது கடைக்கு சென்று புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்டதற்கு செல்வி தீப்பெட்டி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த செல்வன் அருகிலிருந்த அரிவாள் மனையால் செல்வியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வி கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து செல்வனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் செல்வன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வனை தேடி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த செல்வியை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.