சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை நடத்தியத்தில் அந்த மிரட்டல் புரளி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.