இந்த அரசு மீது நம்பிக்கை இருக்கு… முதல்வர் பதவி விலக மாட்டார்… முன்னாள் காங்கிரஸ் தலைவர் கண்டனம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் அழகிரி சென்றிருந்தார். அங்கு வந்த செய்தியாளர்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அழகிரி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் எதிர் கட்சியாக இருக்கும் அரசியல் கட்சியினர் உண்மையாக அனுதாபம் தெரிவிக்கிறார்களா அல்லது அதை வைத்து ஆதாயம் தேட பார்க்கிறார்களா என்பது தெரியவில்லை.

ஏனென்றால் அவர்கள் கட்சியினர்களே மது விற்பனையில் ஈடுபட்டு கைதாகி இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்த அழகிரி, முதல்வன் ஸ்டாலின் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுத்து சரியான பாதையில் செல்வார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!