செய்திகள் மாநில செய்திகள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தலைமை செயலாளர் அறிவிப்பு…!! Revathy Anish23 July 20240103 views தமிழாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கியத்துறைகளில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த அதிரடி உத்தரவு விட்டுள்ளார். அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஷேக் அப்துல்லா ரகுமான், வணிகவரித்துறை இணை ஆணையராக துர்கா மூர்த்தி, குடிநீர் வளங்கள் இணை ஆணையராக கற்பகம், அருங்காட்சியகங்களின் இயக்குனராக கவிதா ராமு, கருவூலத்துறை ஆணையராக கிருஷ்ணனுன்னி, தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக அம்பலவாணன். நெல்லை மாநகராட்சி ஆணையராக சுகபுத்ரா, ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு, சேலம் மாநகராட்சி ஆணையராக ரஞ்சித் சிங், ஆவடி மாநகராட்சி ஆணையராக கந்தசாமி, ஈரோடு கூடுதல் ஆட்சியராக சதீஷ், நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக விவேகானந்தன், சி.எம்.டி.ஏ தலைமை செயல் அதிகாரியாக சிவன்யாம், திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனராக ஹனிஷ் ஷாப்ரா, கைவினைப் பொருள்கள் வளர்ச்சி கழக நிர்வாகி இயக்குனராக அமிர்த ஜோதி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.