பயணிகளின் நலன் கருதி… புலிகள் காப்பகம் மூடல்… துணை இயக்குனர் அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என இயற்கை உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தெப்பக்காடு பகுதியில் சுற்றுலா வருகின்ற 22 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம், யானைகள் முகாம் ஆகியவை மூடப்படுவதாக புலிகள் காப்பகத் துணை இயக்குனர் வித்யா மற்றும் முதுமலை வரவேற்பு வனச்சரகர் சிவக்குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!