இந்தியன் 2 வெளியீடு…. ரசிகர்களின் அட்டகாசம்…. கற்பூரத்தால் ஏற்பட்ட விபரீதம்….!!

கமல்ஹாசன் நடித்து இயக்குனரான சங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியானது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு திரையரங்கின் முன்பு வைத்திருந்த பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

இந்நிலையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா தியேட்டரின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர் முன்பு 5 கிலோ கற்பூரத்தை ஒரு இரும்பு ஸ்டாண்டில் வைத்து ரசிகர்கள் கொளுத்தியுள்ளனர். அப்போது கற்பூரத்தில் பற்றிய நெருப்பு அருகில் இருந்த பேனரிலும் பற்றி கொண்டது.

தண்ணீர் ஊற்றியும் நெருப்பு அணையாததால் இரும்பு ஸ்டாண்டைக்கு இலை தள்ளி பின்னர் நெருப்பை அணைத்துள்ளனர். கற்பூரத்தை கொளுத்திய வரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!