செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் இந்தியன்-2… லஞ்சம் வாங்காமல் வேலை செய்யுங்கள்… விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!! Revathy Anish18 July 20240139 views விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அலுவலகத்தில் உள்ள கழிவரையின் கதவில் யாரோ எளிய, பாமர மக்களின் குறைகளை பூர்த்தி செய்யுங்கள், ஏழை எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி அதை நிறைவேற்றுங்கள், லஞ்சம் வாங்காமல் உங்களுடைய பணியை செய்து முடிங்கள் என எழுதப்பட்டிருந்தது. கடைசியாக இந்தியன்-2 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஆட்சியர் மற்றும் அலுவலக அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வாசகத்தை எழுதியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. அந்த திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கமலஹாசன் கொலை செய்வது தான் கதை. எனவே லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மத்தியில் விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவர் இத்தகைய வாசகத்தை கதவில் ஒட்டியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.