செய்திகள் தேசிய செய்திகள் இந்திய கூட்டணி தொடர் வெற்றி… வெளியான தேர்தல் நிலவரங்கள்… ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…!! Revathy Anish13 July 2024092 views நாடு முழுவதிலும் உள்ள 7 மாநிலங்களில் பல்வேறு 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெருமளவில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கம்லேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். நலகர் தொகுதியிலும் காங்கிரஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஹமீர்பூர் பாஜக வசம் சென்றுள்ளது. இதனையடுத்து உத்திரகாண்ட்டில் 2 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மோகிந்தர் பாகத் கைப்பற்றியுள்ளார். மேற்கு வங்கத்தை நடைபெற்ற 4 தொகுதி தேர்தலில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அதே போல் மத்தியபிரதேசம் அமர்வார் தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பீகார் நிலவரத்தை பொறுத்தவரை ருபாலி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் முன்னிலை வகித்துள்ளார்.