அமெரிக்காவில் பலியான இந்திய மாணவன்… குளிக்க சென்றபோது விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்காவில் உள்ள டிரினே பல்கலைக்கழகத்தில் இந்தியா தெலுங்கானாவை சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பவர் படித்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி நியூயார்க் அல்பேனி பகுதியில் உள்ள பார்பர்வில் அருவிக்கு குளிக்க சென்றார். அப்போது இவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் சாய் சூர்யா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நியூயார்க் இந்திய தூதரகம் மூலம் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!