Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள்…! கனவுகள் அனைத்தும் நினைவாகும்…!!

கடகம் ராசிக்கு…! சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள்…! கனவுகள் அனைத்தும் நினைவாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! திட்டமிட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உதாசீனம் படுத்தியவர் மத்தியில் சிறப்புடன் வாழ்ந்து காட்டுவீர்கள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். கட்டிடப் பணி மீண்டும் தொடருவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் நல்ல எண்ணங்களாக வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வீட்டில் இருப்பவர்களுடன் வீணான வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீணான பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் நிறைவேறாத காரியங்களை கூட நிறைவேற்றுவீர்கள்.

அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு சுமுகமான உறவு வெளிப்படும். பெண்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். மன நிம்மதி கொள்வீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். காதல் வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி காண முடியும். கல்வியில் மிகுந்த நாட்டம் அதிகரிக்கும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.