Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படுவார்கள்…! சிந்தனையில் முன்னேற்றம் உண்டாகும்…!!

மேஷம் ராசிக்கு…! மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படுவார்கள்…! சிந்தனையில் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! வெற்றிகள் குவிவதால் மனதிற்குள் தெம்பு வரும்.

குழந்தைகளின் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடத்திலும் நல்ல பெயர் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். உங்களின் வேலைகளை நீங்களே அற்புதமாக செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமை இருந்தாலும் சகித்து செல்ல வேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியும். பிரச்சனை பெரிதாக இல்லை.

பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். காதலில் குழப்பம் வேண்டாம். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.