Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! எதிலும் வெற்றி கிடைக்கும்…! பண உதவி கிடைக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! எதிலும் வெற்றி கிடைக்கும்…! பண உதவி கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே… இன்று எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் அற்புதமாக வாழ்வீர்கள்.

காலை நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் கண்டிப்பாக வரக்கூடும். இறை வழிபாட்டினால் மனமும் மகிழ்ச்சி அடையக்கூடும். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பமும் விலகி செல்லக்கூடும். திட்டமிடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். உறவினர்களால் வீண்விரயம் கொஞ்சம் உண்டாகும். இன்று வியாபாரம் தொடர்பாக வெளியில் செல்லக்கூடும். தொழில் நிர்வாகத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை நீங்கும். எந்த ஒரு முயற்சிகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கண்டிப்பாக மகிழ்ச்சி நிலவும். பெண்கள் குழப்பமில்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள். சிரமம் இல்லாமல் எதிலும் ஈடுபடுவீர்கள். இஷ்ட தெய்வ அருளும் துணையாக இருக்கக்கூடும் பெண்கள் மாறுபட்ட கோணத்திலிருந்து சிந்தித்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

இந்த நாள் உங்களுக்கு மனம் அழுத்தம் நீங்கி தெளிவு கிடைக்கும். காதலில் பொறுமையாக இருங்கள் முடிவுகளை பொறுப்புடன் எடுங்கள். மாணவர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கல்விக்காக எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். பெரும் முயற்சிகளுக்கு பின்னர் வெற்றியும் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் நீங்கள் எழுந்ததும் கண்டிப்பாக சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஆறு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.