Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனைகளில் லாபகமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்…! உடனுக்குடன் எந்த ஒரு பணியும் முடித்துக் காட்டுவீர்கள்…!!

ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனைகளில் லாபகமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்…! உடனுக்குடன் எந்த ஒரு பணியும் முடித்துக் காட்டுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! மாற்றங்களை விரும்பக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

மாற்றங்கள் நல்ல விஷயத்தை ஏற்படுத்தி கொடுக்கும். தெளிவான சிந்தனை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சி ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். எதிர்பாராத திசை திருப்பம் ஏற்படும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். எதிலும் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வெற்றி காண முடியும். எதிர்காலத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். திறமையுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனக்கவலை நீங்கும் பயப்பட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நிர்வாக செலவை ஈடு கட்டிவிடுவீர்கள். இன்று உங்களுக்கு மாற்றங்களும் ஏற்றங்களும் இருக்கும்.

கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் சரியாகும். எண்ணற்ற சிந்தனை வெளிப்படும். எதையோ நினைத்து யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இறைவன் அருளால் நன்மை உண்டாகும். பெண்கள் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். காதல் மன கசப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் சரியாகும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும்.

புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். சிந்தனை திறன் வெளிப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் அடைய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.