Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் முன்னேறி செல்வீர்கள்…! மனதிற்குள் தெம்பு உருவாகும்…!!

சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் முன்னேறி செல்வீர்கள்…! மனதிற்குள் தெம்பு உருவாகும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! அடிப்படை தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கையை வளமாக்குவீர்கள். மனதிற்குள் ஒருவித சந்தோஷம் உண்டாகும். கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள். மனதிற்குள் தெம்பு உருவாகும். முயற்சிகளும் பயிற்சிகளும் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் ஆதாரம் பெருகும்.

குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சிறிய கருத்து வேற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். குழந்தைகளுக்காக கூடுதலாக பாடுபடுவீர்கள். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. செய்யும் காரியங்களை சிறப்பாக செய்து மற்றவர்களிடம் பாராட்டு வாங்குவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும்.

முடிவுகளை மிகத் தெளிவாக எடுக்க முடியும். பெண்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். பெண்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக காப்பாற்றி கொடுப்பீர்கள். காதல் கொஞ்சம் தடுமாற்றத்தை குழப்பத்தை கொடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு பின் முடிவெடுத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு விடுமுறை விட்டாலும் படிப்பிற்காக நேரத்தை ஒதுக்குங்கள். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். விளையாடுங்கள் உடலை வலுப்படுத்துங்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.