துலாம் ராசிக்கு…! புத்திசாலித்தனம் வெளிப்படும்….! பெண்கள் தெய்வீக சிந்தனை அதிகப்படுத்தி கொள்வீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு நம்பிக்கை கூடும்.

பெரிய பிரச்சினைகளை கூட சரி செய்து விடுவீர்கள். மனக்குழப்பம் நீங்கும். விடியும் பொழுதே நல்ல தகவல் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுகளை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் போட்டி பனி போல விலகி செல்லும். தேவையான நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை செய்வார்கள். அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் இருக்கும். பெண்கள் குடும்பத்தை அற்புதமாக வழி நடத்த முடியும். யோகமான நல்ல பலனை பெற முடியும். பெண்கள் தெய்வீக சிந்தனையை அதிகப்படுத்தி கொள்வீர்கள்.

தெய்வத்திற்காக சிறு தொகை செலவிட கூடும். அனைவரிடத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். புத்திசாலித்தனம் வெளிப்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் இருக்கும். பிரிந்து சென்ற தம்பதியர் மீண்டும் வந்து இணையக்கூடும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் மனக்குழப்புத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு சாதிக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!