கும்பம் ராசிக்கு…! கடன் பிரச்சனையை லாபகரமாக கையாளுவீர்கள்…! மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவது நல்லது…!!

கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திருப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கும்.

சிரமங்களை எல்லாம் சரி கட்டி விடுவீர்கள். உங்கள் பாதையில் ஏற்பட்ட தடைகளும் தடங்களும் விலகிச் செல்லும். எல்லா திசைகளிலும் ஏற்படக்கூடிய கடினமான சூழல் மாறிவிடும். போட்டியின் காரணமாக வியாபாரத்தில் ஆதாயம் கொஞ்சம் குறையும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உறவுகளுக்குள் சின்ன சின்ன பகை ஏற்பட்டாலும் பின்னர் சரியாகும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

உடல் ஆரோக்கியம் கண்டிப்பாக வளம் தரும். அனைவரையும் அனுசரித்து சொல்வது மிக நல்லது. நல்லது எது கெட்டது எது என்று சரியான முறையில் தீர்மானிக்க வேண்டும். சிறு சிறு உதவிகளை பெறுவீர்கள். அரசில் உள்ளவர்களுக்கு கட்சியில் சில பிரச்சனை வரக்கூடும். தொண்டர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பெண்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி கட்டி விடுவீர்கள். கடன் பிரச்சினைகளை கூட சரி கட்டி விடுவீர்கள். காதல் கொஞ்சம் மன கசப்பை கொடுக்கும் பயப்பட வேண்டாம். இறுதியில் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும்.

மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது தைரியமாக ஏற்றுக்கொள்வீர்கள். அதை செய்யும்பொழுது கவனமாக செய்ய வேண்டும். இடை விடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!