Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! சிந்தனை ஒருநிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுவீர்கள்…! பிடித்தமான வேலைகளை செய்து பொழுதை கழிப்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! சிந்தனை ஒருநிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுவீர்கள்…! பிடித்தமான வேலைகளை செய்து பொழுதை கழிப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! பொது விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வீண் விவகாரம் கொஞ்சம் ஏற்படும். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்து காட்டுவீர்கள். விருந்தினர் வருகையால் திடீர் செலவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்களை சரியாக பார்க்க வேண்டும். விழிப்புணர்ச்சியுடன் எதிலும் ஈடுபடுவது நல்லது. செயல்களில் இருந்து மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். வெற்றிக்காக கண்டிப்பாக போராட முடியும். காரிய தடை தாமதம் ஏற்பட்டது விலகி செல்லும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் படிப்படியாக விலகும். மாற்றங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண முடியும். பெண்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.

குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி வாகை சூடுவீர்கள். ஆராய்ச்சி தொடர்புடைய விஷயங்களில் நாட்டம் செல்லும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். முடிவுகளில் வெற்றி உண்டாகும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்க முடியும்.

தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.