செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!! Revathy Anish9 July 2024070 views சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். மேலும் தமிழகம் முழுவதிலும் 30 இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஊழியர்களுக்கு இன்றய சம்பளம் கிடையாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.