உத்தரபிரதேசம் மாநிலம் மிராட் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Instagram மூலமாக வங்கியில் பணிபுரிவதாக கூறிய நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அவரிடம் தனது குடும்ப சூழ்நிலை கூறி தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் அந்த நபர் தான் நிச்சயம் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னை சந்திக்க வருமாறும் தனது நண்பன் தங்களை அழைத்து வருவார் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண் அந்த நபர் கூறிய நபருடன் சென்ற நிலையில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கூல்ட்ரிங்க்ஸில் மயக்கம் மருந்து கொடுத்து அந்தப் பெண் மயங்கியதும் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்ததும் தனக்கு நடந்த கொடுமையை தெரிந்து கொண்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஸ்கிரீமில் மனித விரல்…. அதிர்ந்து போன மருத்துவர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!