நேர்முக உதவியாளர்கள்… இட மாறுதல் கட்டாயம்… பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஆசிரியர்களின் நலன்கருதி பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களுக்கு கட்டாய இட மாறுதலும், 3 ஆண்டுகளுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் விருப்பப்படி இட மாறுதல் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் ச. கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

மேலும் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் முன்பே நேர்முக உதவியாளர்களுக்கு இட மாறுதல் வழங்குவதற்கான ஆணையை வழங்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறந்த ஆளுமை, நிர்வாகத்திறன் கொண்ட உயர்கல்வி பள்ளி தலைமை ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களாக நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!