100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள்… வேதனை தெரிவித்த நீதிபதிகள்…!!

தேனி மாவட்டம் பழைய கோட்டை பஞ்சாயத்து பகுதியில் 2020-21 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பழைய கோட்டை பஞ்சாயத்து தலைவர், திட்ட மேம்பாட்டு அலுவலர் மீது ஹை கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி விடலாம் என தோன்றுகிறது என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றது எனவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 10-ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!