பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில் முக்கிய அரசியல் தலைவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தப்பிக்க விடும் அளவிற்கு காவல் துறையினர் அலட்சியமாக இருந்தனரா?, பாதுகாப்பில் இருந்த குற்றவாளியை எப்படி சுட்டுக் கொள்ள முடியும்.
இந்த நிகழ்வின் மூலம் தி.மு.க ஆட்சியில் காவல்துறையின் நிலையை குறித்தும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது குறித்தும் தெரிகிறது. மேலும் தி.மு.க.வினர் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதால் உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினர் இப்படிப்பட்ட என்கவுண்டரை நிகழ்த்தியுள்ளனரா என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விசாரணை தொடங்கும் முன்பே குற்றவாளி ஒருவரை என்கவுண்டர் செய்திருப்பது உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கான நாடகம் என கூறியுள்ளார். எனவே மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்றம் இதனை முறையாக விசாரித்து திருவேங்கடம் கொல்லப்பட்டது குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.