பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோகர். இவர் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வனப்பகுதி ஒன்றில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாம்பு சந்தோஷை கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அந்த பாம்பை பிடித்து இரண்டு முறை கடித்துள்ளார். பின்னர் சந்தோஷின் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருக்கிறார். ஆனால் அவர் கடித்த பாம்பு உயிர் இழந்துவிட்டது. தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்தால் பாம்பின் விஷம் மீண்டும் பாம்பிற்கு சென்று விடும் என்பது அப்பகுதியினரின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது.