அலுவலத்திற்கு செல்வது போல் இல்லை… பாழடைந்த நிலையில் தாலுகா அலுவலகம்… பொதுமக்கள் வேதனை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்திருக்கும் தாலுகா அலுவலகம் சுமார் 200 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. 1989-ல் கட்டப்பட்ட இந்த அலுவலகம் தற்போது முறையான பராமரிப்பின்றி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை பெய்தால் அலுவலகத்தின் உள்ளே தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உள்ள முக்கிய ஆவணங்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை வசதிகூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் ஆதார் பதிவு மையம் மேல் தளத்தில் இருப்பதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பவில்லை. தாலுகா அலுவலகம் முழுவது முள்செடிகள், புதர்கள் மாடி கிடைப்பதால் அது பாழடைந்த கட்டிடம் போல காட்சி அளிப்பதாக தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!