தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. சிபிஐ அதிகாரிகளை கேள்வியால் தாக்கிய நீதிபதிகள்….!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற நீதிபதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு வழக்கு வந்த போது இந்த சம்பவத்தில் அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என்று சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எந்த அதிகாரிகள் பெயரையும் குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்தி வருகிறீர்கள் என்று சிபிஐக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் உயர் நீதிமன்றம் இது சிபிஐயின் கையாலாகாத தனத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது திட்டமிட்டு நடந்ததாக தெரிகிறது என்று கூறிய நீதிபதிகள் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஒருவர் விருப்பத்திற்கு இணங்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருப்பதாகவும், அதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டு இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தனர். சம்பவங்கள் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என எப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!