செய்திகள் மாநில செய்திகள் நிரம்பி வரும் கபினி அணை நீர்மட்டம்… வினாடிக்கு 7,257 கனஅடி நீர் திறப்பு…!! Revathy Anish13 July 2024073 views தமிழகம் முழுவதிலும் பருவ மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான அணையின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணை, கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் 84 அடியுள்ள கபினி அணையில் நீர்மட்டம் 82.91 அடியாகவும், 124 அடி கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையில் 104.60 அடியாகவும் உயர்ந்துள்ளது. மேலும் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 7,257 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்தது.