அரசியல் செய்திகள் செய்திகள் கம்பராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியை தான்… அமைச்சர் ரகுபதி…!! Revathy Anish22 July 20240347 views புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்பன் கழகத்தின் 10-வது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுள்ளார். அப்போது அவர் கம்பராமாயணத்தையும் திமுக ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். கம்பராமாயணத்தை சமுதாய கண்ணோட்டத்தோடு உற்று நோக்கினால் அதில் சமத்துவம், சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று இருக்கும். இதுதான் தற்போது திராவிட மாடல் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே கம்பராமாயணம் எங்களுடைய திராவிட மாடல் ஆட்சிக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும். மேலும் எல்லோருக்கும் எல்லாம் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன், அவர் சமூக நீதி, சமத்துவம் இவற்றையெல்லாம் போதித்து உலகிற்கு எடுத்துச் சொன்னவர். திராவிட மாடல் ராமன். அதே போல் தி.மு.க ஆட்சியிலும் அனைவரையும் சகோதர சகோதரிகளாக ஏற்று கொண்டிருக்கிறோம். என அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.