கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் காதலனுடன் சேர்த்து வைங்க… உதவி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன…? வாலிபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish18 July 20240100 views கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் ராகவி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவனை பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ராகவி அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால் ராகவியின் காதலை ஏற்க மறுத்து, அவருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனையடுத்து பாலமுருகனை அடைய வேண்டும் என்ற ஆசையில் ராகவி அவருக்கு தெரிந்த நபர்களான கார்த்திக், ஆறுமுகம், சதீஷ் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ராகவியிடம் 20 லட்சம் கொடுத்தால் பாலமுருகனுடன் சேர்த்து வைக்கிறோம் என கூறியுள்ளனர். இதை நம்பி ராகவி முதலில் 10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். சம்பவத்தன்று ஆறுமுகம், கார்த்திக், சதீஷ் ஆகியோர் ராகவியை பணத்துடன் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு பணத்தை தருமாறு கேட்டபோது, பாலமுருகனுடன் சேர்த்து வைத்த பிறகு பணத்தை தருகிறேன் என்று ராகவி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி 10 லட்சம் ரூபாயை ராகவியிடமிருந்து பறித்துக் கொண்டு சென்றனர். இது குறித்த அவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகம் கார்த்திக் சதீஷ் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு அவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.