செய்திகள் தேசிய செய்திகள் இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!! Inza Dev26 June 2024061 views நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறும்போது “சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே மலையாளம் பேசும் சமூகங்களை ஒன்றிணைத்த கேரளம் உருவாக வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வந்தது. மாநிலத்தின் பெயர் மலையாளத்தில் கேரளம் என இருக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் கேரளா என இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி கேரளம் என மாநிலத்தின் பெயரை மத்திய அரசு மாற்ற வேண்டும் அதேபோன்று எட்டாவது பக்கத்தில் இந்திய மொழிகள் பற்றி குறிப்பிட்டுள்ளதிலும் மாநிலத்தின் பெயரை கேரளம் என்று திருத்தம் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.