சிறுவன் உள்பட 2 பேர் கடத்தல்… 2 கோடி கேட்டு மிரட்டும்… போலீசாரின் அதிரடி சம்பவம்…!!

மதுரை மாவட்டம் எஸ்.எஸ். காலனி பகுதியில் 14 வயது சிறுவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் வழக்கம்போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஆட்டோ டிரைவர் மற்றும் சிறுவனை கடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் தாய் மைதிலிக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தியுள்ளதாகவும், 2 கோடி ரூபாய் கொடுத்தால் திருப்பி ஒப்படைப்பதாக கூறியுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் நெருங்குவதை அறிந்து அச்சமடைந்த கடத்தல் கும்பல் சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை புக்கோட்டை 4வழி சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை பாதுகாப்பாக மீட்ட போலீசார் கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!