பள்ளியில் இருந்த சிறுவன், சிறுமி கடத்தல்… போலீஸ் தீவிர விசாரணை… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக வேலனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ரக்சதா(11) என்ற மகளும், நித்தின்(7) என்ற மகனும் உள்ள நிலையில் இவர்களும் ஆர்த்தியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் நிலையில் நேற்று காலை வழக்கம்போல ரக்சதா மற்றும் நித்தின் பள்ளிக்கு சென்றனர்.

இந்நிலையில் மதிய உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே வந்த அக்காள், தம்பியை காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கடத்திக்கொண்டு சென்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மேலும் குழந்தைகளின் தந்தை வேலனும் செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!