செய்திகள் கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கு… புதிதாக 2 பேரிடம் விசாரணை… திசையன்விளை பகுதியில் பரபரப்பு…!! Revathy Anish6 July 2024094 views திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு போலீஸ் முத்தரசி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் புதிதாக காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துரை நிர்வாகி விவேக் முருகன் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகிய 2 பேரிடம் போலீசார் தனித்தனியாக 2 மணிநேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களிடம் ஜெயக்குமாருக்கு தெழிலதிபர், அரசியல் பிரமுகர், அல்லது பெண்கள் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் திசையன்விளை பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் வந்த வண்ணமே இருப்பதால் பரபரப்பு நிலவி வருகிறது.