குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஃபிஷ் ஆம்லெட் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
நன்கு சதை உள்ள மீன் – 3
முட்டை – 5
தக்காளி – 2
வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 5
கறிவேப்பிலை – 2 கொத்து
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்,
இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் நன்றாக ஆவி வரும் வரை வேக வைக்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஆவியில் வேக வைத்த மீனின் முட்களை நீக்கிவிட்டு உதிர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்ந்து கொள்ளவும்.
நன்கு வதக்கிய பின்னர் உதிர்த்து வைத்திருக்கும் மீனை சேர்த்து கலந்து விடவும்.
இதனுடன் தேவையான உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, தாயார் செய்து வைத்த கலவையை சேர்க்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதை நன்கு வேக வைக்க வேண்டும்.
இப்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான ஃபிஷ் ஆம்லெட் ரெடி.