காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் 100 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கமாக இருந்த நிலையில் தற்போது குப்பைகளை அதிகளவில் சேருவதால் அதனை தரம்பிரிக்க முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் கொட்டி வருகின்றனர்.
மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நத்தப்பேட்டை ஏரியில் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளது. இதனால் வையாவூர் ஏரிக்கு செல்லும் நீரும் பச்சை மற்றும் கருப்பு நிறமாக காணப்படுகிறது. இந்த நீரை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி மீது புகார் அளிக்கப்பட்டு பசுமை தீர்ப்பாயம் 93 லட்சம் அபராதம் விதித்த நிலையிலும் அவர்கள் மீதும் அதே தவறை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே நத்தப்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.