அங்கங்கே மண்சரிவு… போக்குவரத்து துண்டிப்பு… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனையடுத்து மழை நீரால் மூழ்கிய வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

மேலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் உள்ள தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மசினகுடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டம் முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!