சுற்றி சுற்றி வந்த சிறுத்தை… உயிர் தப்பிய வளர்ப்பு நாய்கள்… வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பில் 3 வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து நாய்களை வேட்டையாட முயன்றது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக நாய்கள் கூண்டுக்குள் இருந்ததால் சிறுத்தையினால் அதை நெருங்க முடியாமல் கூண்டை சுற்றி சுற்றி வந்தது. இதனையடுத்து நாய்களை வேட்டையாட முடியாததால் சிறுத்தை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தினை குடியிருப்பில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!