Home செய்திகள் ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை… ட்ரோன் மூலம் கண்காணிப்பு… வனத்துறையினர் எச்சரிக்கை…!!

ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை… ட்ரோன் மூலம் கண்காணிப்பு… வனத்துறையினர் எச்சரிக்கை…!!

by Revathy Anish
0 comment

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி கோம்பைக்காடு, ஓடுவாங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த கிராமங்களில் விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு மற்றும் மாடுகள் சில தினங்களாக வனவிலங்குகளால் அடித்து கொல்லப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் பதிவான கால் தடங்களை வைத்து சோதனை செய்ததில் அந்த வனவிலங்கு சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், ட்ரோன்களை பறக்கவிட்டு சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தை பிடிக்கும் வரை அப்பகுதிக்குள் யாரும் ஆடு, மாடுகளை கொண்டு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.