இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர விதவிதமாக உணவுகளை தயாரித்து வருகின்றனர். இதில் வடமாநிலங்களில் பிரபலமான பானிபூரியும் ஒன்று. தமிழகத்தில் பெரும்பாலான சாலை ஓரங்களில் வடமாநிலத்தவர்களின் பானிபூரி கடைகளை காண முடியும். இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் சுமார் 600 பானிபூரி கடைக்காரர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பானிபூரி தயாரிப்பவர்கள் மீதமுள்ள பழைய எண்ணெய்களை பயன்படுத்தக்கூடாது என்றும், சுத்தமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி சதீஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக மாநகராட்சி அம்மா மாளிகையில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் லைசென்ஸ் வழங்கப்படுகிறது.