செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் டிரேடிங்கில் நஷ்டம்… மளிகை கடைக்காரர் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish20 July 2024098 views சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். மளிகை கடை நடத்தி வரும் இவர் ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து வந்துள்ளார். அதற்கு அடிமையான நவநீதகிருஷ்ணன் நாளடைவில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடம் கடன் வாங்கி ஆன்லைன் டிரேடிங் செய்து அதிக நஷ்டம் அடைந்துள்ளார். இதனையடுத்து வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் உறங்கிய பின்பு நவநீத கிருஷ்ணன் அருகில் உள்ள அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு ஆன்லைன் ட்ரேடிங் செய்து 30 லட்சம் வரை நஷ்டம் அடைந்து கடனாளியாக ஆகிவிட்டேன், அதனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.