செய்திகள் தேசிய செய்திகள் மின்கம்பத்தில் சிக்கிய மஹிந்திரா தார் எஸ்யூவி… உயிர் தப்பிய பெண்…இணையத்தில் புகைப்படம் வைரல்…!! Revathy Anish9 July 20240165 views அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பெண் ஒருவர் ஒட்டி சென்றுள்ளார். அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் சாலையில் இருந்த மின்கம்பத்தில் ஏறி சிக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய நபர்கள் அங்கிருந்து காரில் தப்பினர். இதுகுறித்து குருகிராம் போலிஸ்ற் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.