ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் முக்கிய குடிநீர் ஆதாரம்… 64 அடியை எட்டியது… தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு… Revathy Anish29 June 20240119 views நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பவானிசாகர் அணை ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 64 அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து 200 கன அடி நீர் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்துவிட பட்டுள்ளது. அதே போல் 41 அடி கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையில் நீர்மட்டம் 38.93 அடியாகவும், 33 அடி கொண்ட வரட்டுப்பள்ளம் அணையில் 24,57 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.