பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்… பலருக்கும் மூச்சுதிணறல்… ஈரோட்டில் பயங்கர தீ விபத்து…!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகே ராவணன் என்பவர் பரணி பைப்ஸ் &ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் உள்ள குடோனில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பெருட்களையும் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல கடையில் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியது.

இதனை பார்த்த கடையின் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 40 வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீ வேகமாக கடையில் இருந்து குடோனுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறியது. மேலும் தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மாவட்டம் முழுவதிலும் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த புகையினால் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கும், கடை ஊழியர்கள் 2 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் கடையில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!