“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேமாகுமாரி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவரது ஒரே மகள் அஸ்வதி சாமியார்மடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வதி வீயன்னூர் பகுதியை சேர்ந்த ராஜேஷை காதலித்து வந்தது பிரேமாகுமாரிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அஸ்வதிக்கு அவரச அவசரமாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகள் வீட்டிற்க்கு தெரியாமல் கடந்த மாதம் 19ஆம் தேதி கோவிலில் வைத்து ராஜேஷை திருமணம் செய்து கொண்டு ‘அலைபாயுதே’ படத்தில் வருவது போல் அவரவரது வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அஸ்வதி திருமணம் செய்து கொண்டது பிரேமாகுமாரிக்கு தெரியவந்த நிலையில் மகள் என்றும் பார்க்காமல் வீட்டில் அறையில் பூட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் காதலில் உறுதியாக இருந்த அஸ்வதி சம்பவத்தன்று தாயாரை ஏமாற்றிவிட்டு வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பித்துள்ளார். இதனையடுத்து ராஜேஷ் மற்றும் அஸ்வதி திருவட்டார் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து பிரேமாகுமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் காவல்நிலையம் வந்த போது அஸ்வதி மற்றும் ராஜேஷ் கைகோர்த்து நிற்பதை பார்த்து ஆத்திரமடைந்து போலீசார் முன்னிலையிலே தாக்கியுள்ளார். பின்னர் போலீசார் பிரேமாகுமாரியை சமாதானப்படுத்தி அஸ்வதியை ராஜேஷுடன் அனுப்பி வைத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!