கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் மேயர் கல்பனா ராஜினாமா… எதிர்ப்பை காட்டி வந்த எம்.எல்.ஏ.க்கள்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு… Revathy Anish4 July 2024087 views கோவை மாவட்டத்தில் 19-வது வார்டில் வெற்றி பெற்று தி.மு.க.வை சேர்ந்த கல்பனா கோவை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இவரது கணவரின் அரசியல் தலையீடு காரணமாக பல்வேறு புகார்கள் அவர்மீது எழுந்தது. இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் இவர் மீது நம்பிக்கை இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே கல்பனா ராஜினாமா செய்ய சென்னைக்கு சென்றிருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் கோவை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.