செய்திகள் மாநில செய்திகள் மெடிமிக்ஸ்-இன் சோப்எரா புத்தகம்… முதல் பிரதியை பெற்ற இசைஞானி இளையராஜா…!! Revathy Anish22 July 20240130 views இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு நிறுவனமான மெடிமிக்ஸ் தனது 55 ஆண்டு கால பயணத்தை சோப்எரா என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை தயாரித்த மெடிமிக்ஸ் குடும்பம் அதன் பிரத்தியேக சோப்எரா-காப்பி டேபிள் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். சென்னையில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஏவிஏ சோலையில் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஏ.வி. அனூப் மற்றும் சோலையின் நிர்வாக இயக்குனர் திரு. V.S. பிரதீப் ஆகியோர் இணைந்து சோப்எரா புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கியுள்ளனர்.