செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை… காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!! Revathy Anish20 July 2024081 views தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கர்நாடக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கனஅடியாக அதிகரித்த நிலையில் அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையில் இருந்து குடிநீர் பாசனத்திற்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.