செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் பழைய குற்றாலம் அருவியில் அமைச்சர் திடீர் ஆய்வு… வனத்துறை வசம் செல்லப்போகிறதா…? Revathy Anish24 August 2024070 views தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட வனத்துறை அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பழைய குற்றாலம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பழைய குற்றாலம் வனத்துறையினர் வசம் செல்ல போராகிறதா என்று பேசப்பட்டு சற்று பரபரப்பு நிலவியது.