உணவு பொருட்களை பறிக்கும் குரங்குகள்…. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம், திருவாயர் பாடி, வேம்பட்டு, காந்தி நகர், மெதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் குட்டியுடன் சுற்றி திரிந்து வருகிறது. இந்த குரங்கு கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வது, பழங்களை எடுத்துச் செல்வது என அட்டகாசம் செய்து வருகிறது.அதேபோல் சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களிடம் உள்ள உணவு பொருட்களை பறித்து கொண்டு செல்கிறது.

மேலும் குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதாக அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!